ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஜெர்மனிக்கு வந்து போன பலன் - ஜட்டி


ஜெர்மனிக்கு  வந்து போன பலன் - ஜட்டி 
இந்தியாவில் இருந்து 6 வருடம்  முன்  ஜெர்மனி நோக்கி   வந்தருக்கு  காரணம்  குறைந்த நேரத்தில் நிறைய பொருள் ஈட் வேண்டும்  என்ற ஆசையால் .
அனால் 2013 இல்  ,ஏன் தோழர்  சொன்னது போல "ஜட்டி  மிச்சம் ஆனது  , மிக பெரிய சேமிப்பு  ". ஆனா ஜட்டி எங்கே ?.

நீங்கள் ஜெர்மன்  வந்து  5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா திரும்பி  செல்ல நினைத்தால் . நீங்கள் தொடர்ந்து  படிக்கலாம்.  உங்கள் முன்னுரிமைகள் பணம் என்றால் மேலும் படிக்க,

2010 நடுவே ஜெர்மனி அரசின் சில கொள்கை,செயல் திட்டம் மாற்றத்தினால் குறுகிய காலத்தில் (5 or 10 years) பொருள் ஈட்டு முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.  காரணம் விலை உயர்வு,சம்பள உயர்வு இல்லை,சேமிக்க முடியாதது,முதலீடு எளிதல்ல மற்றும் இந்திய ரூபாயின்  மதிப்பு சரிவு .
 வெறும் ஒரு வேலை மட்டும் இருந்தால் பொருள் ஈட்ட முடியாது என்று யோசித்து மற்ற வழியை நாடினால், எல்லாம் பல வருடங்கள் முதலீடு செய்தால் தான்  பலன், இல்லையேன்றால்  கடினமே.
நீ தனியாள் என்றால், உங்கள் சம்பளம்  2000 யூரோக்கள் என்றால்  நீங்கள் மாதத்திற்கு 1000 யூரோக்கள் சேமிக்க முடியும் ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்கள் சேமிப்பு பூஜ்யம்.
அதலால் என்னை போன்ற குறுகிய கால சந்தர்ப்ப வாதிகள்  ற்ற  சூழ்நிலைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றால்  எல்லாமே  பெரிய தடையாக இருக்கிறது . அதை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.


1. வீடு கடன் வாங்குவது
2. German Social Security Refund
3. தொழில் 
4. நம் வரி சலுகைகள் - குழந்தைகள் பணம் , கர்ப்பிணி பெண்களுக்கு பணம் 
5. வங்கி கடன்

1. வீடு கடன் வாங்குவது கடினம் 
வீடு வாடகை 800 யூரோஆகும், 
இங்கு  5 வருடம் இருந்தால் 800*5*12=48000 யூரோ=33,60,000 ருபாய் (1 யூரோ=70 ருபாய் )
இதை எப்படி முதலீடாக எப்படி மாற்றுவது 
ஒரு வீடு வாங்கி, அதற்கு  5 வருடம்  வட்டி  கட்டி இந்தியாவுக்கு போகும் போது வீட்டை விற்று காசாகி  போகலாம் என்ற எண்ணம் 

அனால் ஜெர்மனியில் இப்படி யோசித்தால் ஜட்டி காணமல் போகும்,  உங்கள் சம்பள 4000 ஈரோக்கு கமியாக இருந்தால் , முதலில் வீடு கடன் வாங்குவது கடினம். 
வீட்டின் மொத்த தொகை, எடுத்துக்காட்டு  -2,25,000 யூரோ   
இந்த தொகையை கடன் வாங்குவதற்கு உங்களிடம் குறைந்த முதலீட்டு  தொகை 45,000 யூரோ மேல்  இருக்கனும்.இதை தவிர்த்து 22,500 யூரோ   இருக்கவேண்டும் - பத்திர பதிவு, பட்டா  செலவுகளுக்காக, 
இது எல்லாம் இருந்தால்  உங்களுக்கு வங்கி 1,80,000 யூரோ   கடன் அளிக்க முன்  வருவார்கள்.
இதருக்கு  நீங்கள் 20 வருடம் 2.5%  கட்டுவதற்காக  வாங்குவிங்க  என்று வைத்து கொள்வோம் ,
மாதம் -750 வட்டி  கட்ட வேண்டும் .
மாதம் -450 - வரி (தண்ணி , மின்சாரம் , குப்பை ,நிலம் , இதர பல அரசாங்க வரி விதிப்புகள் )
மொத்தமாக 1200  யூரோ  கட்ட வேண்டும்.

நீங்கள்  5 வருடங்கள்  கழித்து  இதை வங்கி  இடமே மீண்டு  விற்கலாம் என்று எண்ணினால்  சற்று  கடினம்தான் ,வேரு ஒருவர்  காசு கொடுத்து வாங்கினாலும் அவரிடம் விற்க  வங்கி தடை விதிக்கலாம் .உங்கள் சம்பளம் 2000 இருக்கும்  பச்சத்தில் இது யோசிப்பது  கடினம்.

2. German Social Security Refund  (Loss=20 to 30 lakhs)
நாம் ஒரு 5 வருடம் உழைத்து இருந்தால் , நாம் வரி கட்டிய காசை மீண்டும்  நமக்கே  தருவது, 
இதுவும் சென்ற ஆண்டு முதல் ஆப்பு வைத்து விட்டார்கள் .
Congress குல்ல நரி நாய்கள்  ஒப்பந்தம்  என்ற பெயரில் 60 வருடத்துக்கு  மேல் தான்  திருப்பி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம் .
அதையும் பங்கு வர்த்தகத்தில்  முதலிடு செய்ய போகிறார்கள். 
https://sites.google.com/a/germanymantra.com/socialsecurityrefund/faqs
http://www.india.diplo.de/Vertretung/indien/en/__pr/Business__News/Social__Security__Agreement__14Oct__2011.html

3. தொழில் 
திறமைக்கு  பரிசு (சுருக்கமாக பின்னர் எழுதுவேன்).நீங்கள் 5 முதல் 10 ஆண்டுகள் போன்ற  குறுகிய  காலத்தை நினைத்தால் இது முற்றிலும் வீண்.

4. வரி சலுகைகள் முழுமையாக  பயன்படுத்தி  கொள்ள ,.
சில நிபந்தனைகளை அடிப்படையாக,
நாம் முழுமையாக வரி சலுகைகள் பயன்படுத்தலாம்.
குழந்தைகள் பணம்-  200  யூரோக்கள் மாதத்திற்கு ( 18 வருடங்கள்  வரும் ஆனா வராது ..துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை   )
கர்ப்பிணி பெண் -    முதலில் மணைவிக்கு விசா வாங்குவதிலையே பெரிய பெரிய தடைகள் தாண்ட வேண்டி வரும், குறைந்தது  6 மாதம் காலம் போராட  வேண்டி  இருக்கிறது  (இந்த தனி கதை பின்னர் விரிவாக சொல்லப்படும் ).
அந்த பெண்  ஏற்கனவே  1 ஆண்டு வேலை பாத்திருக்க வேண்டும்.   அவர்களுக்கு1 ஆண்டு மொத்த தொகையில் இருந்து 65 %(வேலை செய்யும் நிறுவனம் ஒத்து கொள்ள வேண்டும் )  கிடைக்கும் , அனால் எத்தனை மனைவி மார்கள் இங்கே வந்து மொழியை கற்று , வேலைக்கு பதிவு செய்து   போவர்கள் என்று தெரியாது . 

5. வங்கி கடன்.
உங்கள் சம்பளத்தின் அடிப்படையில் உங்களுக்கு வங்கி கடன் கொடுப்பார்கள்.
வங்கி கடன்  6% முதல் 9% வரை வட்டி போடுவார்கள் .(சுருக்கமாக பின்னர் எழுதுவேன்).
அதற்கு இன்சூரன்ஸ்  என்ற பெயரில், மாதம்  மாதம் சில யூரோக்கள்  அழ  வேண்டும் .புத்திசாலியாக பயன் படுத்த வேண்டும்  இல்லையென்றால் கார்போரேட் அடிமை  என்ற பட்டத்தோடு வங்கி கடனாளி என்ற பட்டத்தையும் இழி நிலையோடு சுமக்க வேண்டும்  

வரவு 

1. பாதுகாப்பு,
2. நீங்கள் உங்கள் மனைவி இடம் அதிக நேரம் செலவிட முடியும் . உங்கள்     நெருக்கம் கூடும் .
3. ஊருல மரியாதை 
4.ஐரோப்பிய வாழ்க்கை
5.சகிப்புத்தன்மை நிலை
6. career development  (ரொம்ப முக்கிய மானது , கார்போரேட்ல் இன்னும் 30 வருடம் வேலை செய்ய  விருப்பட்டால் )
7. நீங்கள் இங்கே வாழ முடியும் என்றால் நீங்கள் எங்கும் வாழ முடியும் (இவனிடமே அடிமையாக இருக்க முடியும் என்றால் எங்கு வேண்டுமானாலும் அடிமை வாழ்கையை தொடரலாம் )

இழப்பு 

1.இளமை 
2.தலைமயிர் 

3.இளமை கில்மாக்கள் (நல்லவனாக காட்டி கொண்டால் )
4.சோறு 
5.நிம்மதி 
6.ஆடம்பர அடிமை
7.ஊருக்கு  அடிக்கடி செல்ல முடியாது (உங்க கல்யாணத்துக்கு  சேத்துதான் )


கடைசியாக உங்கள் சம்பளம்  எவ்வளோ என்பதை  பொறுத்தே  எல்லாம்  அமையும்.5 வருடமோ  , 10 வருடத்திலோ  நீங்கள் ஜெர்மனியில்  இருந்து திரும்பி இந்தியா  செல்வது என்றால்  தான்  இது எல்லாம்.
நீங்கள்  ஜெர்மனிக்கு  படிப்பதற்காக   மட்டும் வருவேன் என்றால்  தாராளமாக வரலாம் .ஊர் சுற்றி பார்க்க ,  இங்கயே  வாழ்ந்து  மடிவது என்றால்  தாராளமாக வரலாம் .இங்கே 5 அல்லது 10 வருடம்  பணம் சம்பாரித்து இந்தியா திரும்பி செல்ல  வேண்டும்  என்றால்  நீங்கள் ஜெர்மனிக்கு  வருவதை பற்றி சிந்திக்க வேண்டும்.நீங்கள் இந்தியாவில் சேமிப்பதை விட ஜெர்மனியில் அதிகம் சேமிக்க வழியை கண்டு பிடித்தால் இங்கு வரலாம்.இல்லை என்றால் யோசித்து கொண்டே ஜட்டியை தேட வேண்டும்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

QR code

( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)
QR code (quick response) code அப்படினா என்ன?
chart (250×100)
இங்க பாக்குற பட்துகுலாற "hello world " string ஒழிஞ்சுகிட்டு இருக்கு
செரி எப்படி அத கண்டு புடிக்கிது ?
ஒரு mobile phone , அதுல kamera கூட்டல் QR decoder or reader software
google ல QR decoder அல்லது QR reader அப்படின்னு அடிச்சா
எதாவது சாப்ட்வேர் வரும் அத மோதல install பண்ணனும் ( mobilea)

செரி எதுக்கு இத பயன் படுத்தலாம் ?
உங்க பெயர கொட இதுல பதிவு பண்ணலாம் , உங்க lover பெயர இது உள்ளார ஒளிச்சு வெச்சு அந்த அம்மணி அனுபுச்சு (இதுல ஏன் மனசுக்கு புடிச்சவளோட பேரு ஏலூதிறிகேன் நீயே பாத்து தெரிஞ்சுகோ நு (பழைய idea but புது technology) ஒரு buildup குடுக்கலாம் , முயற்சி பண்றவங்களுக்கு ஏன் வாழ்த்துக்கள் )

செரி கொஞ்சம் bettera என்ன பண்லாம் , இதுல website url ("http://thechandra.blogspot.com/") அப்படின்னு qr code generate பண்ணலாம் . பண்ணீட்டு உங்க நண்பர்கள் யாராவது mobilephone+camera+QR reader+kasu(website parka) இவுளவும் இருந்த இந்த ,படத்து உங்க mobile camera முன்னாடி வெச்ச automatica இந்த websiteuku போஇரும் .

இத வெச்சு பல application பண்ணலாம் (security பத்தி கேக்காதிங்க ). ஒரு வேலை நம்ம mokkai prime minister ரொம்ப சுயமா(சோனியா குட இல்லாம) சிந்திசாரூன, 100 கோடி பேத்துக்கும் இந்த qr code ஊருவாகி , அவன் அவனுக்கு அவன பத்திய தகவலெல்லாம் இதுல சேக்கலாம் ... அப்படினசும் எவன் மொள்ளமாரி ,எவன் முடிச்சவுக்கி தெள்ள தெளிவா காமிக்கும் (parlimentula இத தடை பன்னிருவைங்க , அங்க உள்ளவன் தான் எல்லாம் மொள்ளமரிங்கலசே , so அங்க camera phone தடை பனிருவைங்க )

செரி இத எப்படி நம்ம ஊருவாகுறது?
simpla,google api இருக்கு .. அப்படியே web ல try பண்ணி பார்க்கலாம் ,
illai scripta அடிக்கணும்ன ,
google la,நெறைய library இருக்கு அதுல எதாவது ஒன்ன தூக்கி உங்களுக்கு தவுந்த மாதிரி use பண்ணுங்க
illaina ,php5.3, apache 2.2 irunthuchuna 'zint' appadinu libary iruku
avainglae documentation orualavuku vechrukainga.
matter என்ன ந இத
exec(zint<உங்க தேவை பொருது >) commanda line ல execute பண்ற மாதிரி பண்ணனும் .
ஆனா .net ல இதுக்கு supera documenataion கொடுதுருகைங்க
அப்பறம் என ,உங்க பேரு ,உங்க டாவு பேரு போட்டு ஒன்ன ஒருவாக்கி அனுப்ப வேண்டியதுதான
வாழ்த்துக்கள் !

திங்கள், 5 ஜூலை, 2010

Germoney Reality

2006 august 8 , முதல் வீமான பயணம் . சென்னை - துபாய் ,துபாய்- ஜெர்மனி . அதற்கு முதல் நாள் " இங்கயே எங்க கூட இருந்துரு சாமி எதுக்கு அங்க பொய் கஷ்டபடனும் ( தீர்க்கதருசி ,என்னிக்கி நல்லது சொல்றவங்க பேச்சை கேற்றுகோம் ) " ," சும்மா இருங்க , 5 வருசத்துல கத்தையா கொண்டு வரும்போது பாருங்க (எல்லாம் தெரிஞ்ச மாதிரி) ". 2010 july 5. google talkla - " machi 100 euro accountu anupiru ( namala nambi vantha oru ..) " ," இரு maplai, yerrukanave innum kadan adaikama iruken"... ஜெர்மனிகு என் vanthen, இந்தியாவுல 20 வருசும் சம்பாரிக்குரத இங்க 10 வருசத்துல சம்பாரிசுறலாம்நு நெனச்சேன் ( திருக்குரல பொருட்பால் சரியாய் படிக்குள ,no forecasting) ஆனா என்ன நடந்துச்சு , 2006 dec 1euro=68 2010 july 1 euro= 55 (மண்ணு அள்ளி போட்டாயங்க , america பரதேசிங்க ).. so இப்போ நெலமை என்னா germanyla. ஒருத்தன் master முடிச்சனா (முடிச்சு வேலைல சேந்தா ) அவனுக்கு ஆரம்ப சம்பளம் 40000k per year கைக்கு 1800 முதல் 2000 வரை (இது அதிக பத்சம் ). ஆனா யாருக்கு வேலை கெடைக்கும் , முதல ஜேர்மன் கொஞ்சமாவது பேசணும் (வாய் உள்ள புல்லை போலசிக்கும்), திறமை வேணும் ( திறமைக்கு பரிசு ) , வேலை கெடச்சதுக்கு அப்புறம் ஒரு matter இருக்கு .. மொத 6 மாசம் contract போடுவிங்க , அந்த 6 மாசத்துல உங்களுக்கு புடிகலேன்னா (சொதுகே வலி இல்லை ) நீங்க கலண்டுகலம், அவங்குளுக்கு புடிகலேன்னா உங்கள கலற்றிவிற்றுவைங்க ... இந்த அக்னி பரீட்சை முடிஞ்சதுக்குஅப்புறம் 2 வருஷம் contract குடுப்பாங்க ,ithuku நடுவுல visa பிரச்னை ,பொண்ணு பாக்குற பிரச்சனை ( வயசு கண்டிப்பா 26 தண்டிரும் master முடிக்கும்போது , ஏன கண்டிப்பா master முடிக்க 2 வருஷம் மேல ஆயரும் ,சில கனவான்கள் 4 வருசத்லஐம் முடிகிறதும் (அப்பா ஒரு வழிய முடிச்சு ,செரி செரி சீக்ரம் பொண்ண பாருங்கய )உண்டு ) இந்த சம்பளம் அடுத்த 2 வருசதள ஏறவே ஏறாது, யென germany devloped country.உட்டு வாடகை 400 , சாப்டு செலவு 250, போக்குவரத்துக்கு செலவு (100),இதர செலவுகள் 300. இதுல ,bank loan,பசங்a கிட்டு இருந்து வங்கன கடன் எல்லாத்தையும் செதுகொங்க .... hmm.. எனத சொல்றது .. செரி 5 வருஷம் வேலை செஞ்ச promotion தந்து சம்பளம் அதிகம் தருவாஇன்கலான .... தம்பி மறந்துருங்க .. german கரன் மட்டும் tan மேல போவன் .. நம்ம அழுங்க எல்லாம் கீழ்தான் இருக்காயங்க ..ஒன்னு ரெண்டு பேரு tan porainga( திறமை குடிங்க )... so 5 வருசது அப்புறம் சம்பளம் 55,000 வந்த பெருசு ... குடும்பத்த மட்டும் tan நடத்த முடியும் ,வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாது ,ஊருல நெலம் வாங்க முடியாது ... இதுல பொண்டாட்டி + புல்லை (அவசர பட்டா ) இருந்துச்சுன , டண்டனக , டண்டனக்க . tan.. so மக்களே germaniki சம்பரிக்ளம்னு நெனச்சு kelambuningana .. sorry தம்பி .. அடுத்த option பாருங்க .. ஆமா அப்புறம் நீ ஏன் anga iruka , freeya undunga BOSS!!

ஞாயிறு, 31 மே, 2009

புலவர் நாணேற்றிதி

(inga tamil museum Franfurtla nadanthuchu,appo oru tamil thalaivar oru oolai chuvadi kamichi kel kanda karuthukalai soonaru,atha photo eduthu, tamil type panni,makkaluku en idiratha paniylum :)   arapnikiren)

( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)


ஆகாய தேண்ட முடா சொன்ன
தபு வண்ண திமிறு ஆட்ட !
வெண்ண சொக்க பூமி வெல்ல
சொன்ன சின்ன வண்ண காற்றே !
விண்ண தூக்க வந்த கலை சொக்கனே
சுட ஏற்றி சின்ன சுர வாகை
சுடி வெற்றி மொழி ஈனதுகே !


புலவர் நாணேற்றிதி

Nostradamus , இவரை இறந்ததற்கு பின் அறிந்தவர்கள் பலபேர் . அனால் உயிருடன் இருந்தபோது அவரின் தன்மையை பலர் அறியவில்லை . அதற்கு காரணம் அவராகவே இருக்கலாம் , அவரே இதை தன் காலத்திற்கு பிறகுதான் பலர் அரிய வேண்டும் என்று எண்ணிருக்கலாம். பல மேதைகளின் கருத்துகள் அவர்கள் இறந்த பின் தான் பரவும். socrates, aristotle,plato ... பாரதியார் வரை இதே நிலைமை தான் . மேலே உள்ள புலவர் பற்றி சொல்ல வேண்டுமானால் , அவரும் nostradamus போல்தான் . அவர் பெயர் , பல இலக்கியங்களில் வந்துள்ளது . மறைமுகமாக அவரின் பெயர் வில்லில் ஏற்றிய நாணத்தை குறிக்கிறது , அதுபோலதான் அவரும் , சில பின் வரும் காலங்களின் உண்மைகளை ஏட்டில் எழுதி வைத்த மாய தமிழன். அவர் காலம் தொல் இலைகியங்க்ளுக்கு பிந்தியது அனால் கருத்து , வரும் நூறாண்டுகளுக்கு!. மேலே உள்ள பாடல், அவர் வாழ்ந்த பொது ஓரு சிறிய கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அப்பொழுது பல கண்டத்தில் உள்ள மக்களிடம் நல்ல உறவை வைத்துள்ளனர் , இதை தமிழ் மக்களை பற்றி கூறிஉள்ளார். பின் அந்த உறவை வைத்து உலகத்தை ஆண்டதாக கூறுகிறார். பின் சில காலங்களில், வந்து இறங்கிய சில மனிதர்களிடம் ஆட்சியை ஒப்டைதால் மீண்டும் ஆட்சியை இழந்தனர் என்று முர்பாடலில் கூறுகிறார். பிற்பகுதியில் அவரே ,சில காலங்களுக்கு தமிழர் மீண்டும் பல நாடுகளுக்கு வணிகம் , படிப்பு, கலை , வேலை போன்ற செயல்களுக்கு சென்று அங்கே குடியேறுவர் , பின் அரசியலில் இடுபட்டு மீண்டும் உலகத்தை உள்ள எல்லா பகுதியிலுள்ள தமிழ் கொடிபறக்கும் என்றும் கூறியுள்ளார் .
இவர் சொல்வது உணமையாக மாற இன்னும் கொஞ்சம் காலங்கள் ஆகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிகிறார்கள். இது ஒரு புறம் இருக்க இவரை பற்றி ஆராய்ச்சிகள் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்கிறது. இவரை பற்றி இன்னும் சுவையான தகவல்கள் வெளிவரும் என்று நம்புவோமாக.

ஞாயிறு, 17 மே, 2009

அவன் அவள் மேல் கொண்ட மோகம்


( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)

எனக்கு சிறு வயதில்ருந்தே அவளிடம் மோகம் அதிகம் , என் சிறு வயதில் அவளை பார்க்கும் போது அவள் சுமாராக தான் இருந்தால் , அனால் வருடங்கள் நகர நகர அவள் முன்பை விட வேகமாகவும் விவேகமாகவும் மிக அழகாகவும் மெருகு எரிருந்திரல் . நான் முதலில் அவளை பார்த்த வயது பத்து, அவளை விரலால் வருடியது பதினெட்டில் , 17 அவளை கற்க ஆரம்பித்தது , இன்னும் கற்று கொண்டே இருகிறேன் .முன்பை விடு அவள் மிது பற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது . தினமும் அவளை தரிசித்தால் தான் இரவில் உறங்குவேன் . இப்பொழுது எல்லாம் என் முழுவேலை அவளையே சுற்றியேதான், இப்பொழுது எல்லா நேரமமும் எல்லாம் காலமும் அவளிடம் இருகிறேன் . அனால் என்னவோ தெரியவில்லை, மற்றவைகளை பார்க்கும்பொழுது , எவளிடம் ஏதோ குறை இருக்கிறது, இப்போது அவளை கடைக்கு எடுத்து செல்கிறேன் , புதிதாக வந்த இன்டெல் சிப்பை அவளிடம் பொருத்துவதற்காக.

வெள்ளி, 8 மே, 2009

FIrst LOve

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கொடைமலை.
கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம்.
பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ்.
தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம்.
சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம்.
விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி.
என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சொற்றுணவு.
நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம்.
இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்ததடி நான் உன்மேல் கொண்ட என் முதல் காதல்!!!.


- Copyright Kadhal Kavi MR. Prabhu (SIrkali RWTH Germany)

திங்கள், 20 ஏப்ரல், 2009

பொம்மை பெண்ணே

அன்புள்ள பொம்மை பெண்ணே !!

கண் இருந்தும் காண மறுக்கிறாய் !
காது இருந்தும் கேக்க மறுக்கிறாய் !
வாய் இருந்தும் பேச மறுக்கிறாய் !
கூகிள் இருந்தும் டாக் செய்ய மறுக்கிறாய் !
யாஹூ இருந்தும் யாகம் நடத்தினால் கூட
சாட் செய்ய மறுக்கிறாய் ! பொம்மையெ !
நீ பொம்மையாக இருந்து ! என்னையும்
பொம்மை ஆக்கினாய்!!
- அசுரகவி