ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஜெர்மனிக்கு வந்து போன பலன் - ஜட்டி


ஜெர்மனிக்கு  வந்து போன பலன் - ஜட்டி 
இந்தியாவில் இருந்து 6 வருடம்  முன்  ஜெர்மனி நோக்கி   வந்தருக்கு  காரணம்  குறைந்த நேரத்தில் நிறைய பொருள் ஈட் வேண்டும்  என்ற ஆசையால் .
அனால் 2013 இல்  ,ஏன் தோழர்  சொன்னது போல "ஜட்டி  மிச்சம் ஆனது  , மிக பெரிய சேமிப்பு  ". ஆனா ஜட்டி எங்கே ?.

நீங்கள் ஜெர்மன்  வந்து  5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா திரும்பி  செல்ல நினைத்தால் . நீங்கள் தொடர்ந்து  படிக்கலாம்.  உங்கள் முன்னுரிமைகள் பணம் என்றால் மேலும் படிக்க,

2010 நடுவே ஜெர்மனி அரசின் சில கொள்கை,செயல் திட்டம் மாற்றத்தினால் குறுகிய காலத்தில் (5 or 10 years) பொருள் ஈட்டு முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.  காரணம் விலை உயர்வு,சம்பள உயர்வு இல்லை,சேமிக்க முடியாதது,முதலீடு எளிதல்ல மற்றும் இந்திய ரூபாயின்  மதிப்பு சரிவு .
 வெறும் ஒரு வேலை மட்டும் இருந்தால் பொருள் ஈட்ட முடியாது என்று யோசித்து மற்ற வழியை நாடினால், எல்லாம் பல வருடங்கள் முதலீடு செய்தால் தான்  பலன், இல்லையேன்றால்  கடினமே.
நீ தனியாள் என்றால், உங்கள் சம்பளம்  2000 யூரோக்கள் என்றால்  நீங்கள் மாதத்திற்கு 1000 யூரோக்கள் சேமிக்க முடியும் ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்கள் சேமிப்பு பூஜ்யம்.
அதலால் என்னை போன்ற குறுகிய கால சந்தர்ப்ப வாதிகள்  ற்ற  சூழ்நிலைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றால்  எல்லாமே  பெரிய தடையாக இருக்கிறது . அதை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.


1. வீடு கடன் வாங்குவது
2. German Social Security Refund
3. தொழில் 
4. நம் வரி சலுகைகள் - குழந்தைகள் பணம் , கர்ப்பிணி பெண்களுக்கு பணம் 
5. வங்கி கடன்

1. வீடு கடன் வாங்குவது கடினம் 
வீடு வாடகை 800 யூரோஆகும், 
இங்கு  5 வருடம் இருந்தால் 800*5*12=48000 யூரோ=33,60,000 ருபாய் (1 யூரோ=70 ருபாய் )
இதை எப்படி முதலீடாக எப்படி மாற்றுவது 
ஒரு வீடு வாங்கி, அதற்கு  5 வருடம்  வட்டி  கட்டி இந்தியாவுக்கு போகும் போது வீட்டை விற்று காசாகி  போகலாம் என்ற எண்ணம் 

அனால் ஜெர்மனியில் இப்படி யோசித்தால் ஜட்டி காணமல் போகும்,  உங்கள் சம்பள 4000 ஈரோக்கு கமியாக இருந்தால் , முதலில் வீடு கடன் வாங்குவது கடினம். 
வீட்டின் மொத்த தொகை, எடுத்துக்காட்டு  -2,25,000 யூரோ   
இந்த தொகையை கடன் வாங்குவதற்கு உங்களிடம் குறைந்த முதலீட்டு  தொகை 45,000 யூரோ மேல்  இருக்கனும்.இதை தவிர்த்து 22,500 யூரோ   இருக்கவேண்டும் - பத்திர பதிவு, பட்டா  செலவுகளுக்காக, 
இது எல்லாம் இருந்தால்  உங்களுக்கு வங்கி 1,80,000 யூரோ   கடன் அளிக்க முன்  வருவார்கள்.
இதருக்கு  நீங்கள் 20 வருடம் 2.5%  கட்டுவதற்காக  வாங்குவிங்க  என்று வைத்து கொள்வோம் ,
மாதம் -750 வட்டி  கட்ட வேண்டும் .
மாதம் -450 - வரி (தண்ணி , மின்சாரம் , குப்பை ,நிலம் , இதர பல அரசாங்க வரி விதிப்புகள் )
மொத்தமாக 1200  யூரோ  கட்ட வேண்டும்.

நீங்கள்  5 வருடங்கள்  கழித்து  இதை வங்கி  இடமே மீண்டு  விற்கலாம் என்று எண்ணினால்  சற்று  கடினம்தான் ,வேரு ஒருவர்  காசு கொடுத்து வாங்கினாலும் அவரிடம் விற்க  வங்கி தடை விதிக்கலாம் .உங்கள் சம்பளம் 2000 இருக்கும்  பச்சத்தில் இது யோசிப்பது  கடினம்.

2. German Social Security Refund  (Loss=20 to 30 lakhs)
நாம் ஒரு 5 வருடம் உழைத்து இருந்தால் , நாம் வரி கட்டிய காசை மீண்டும்  நமக்கே  தருவது, 
இதுவும் சென்ற ஆண்டு முதல் ஆப்பு வைத்து விட்டார்கள் .
Congress குல்ல நரி நாய்கள்  ஒப்பந்தம்  என்ற பெயரில் 60 வருடத்துக்கு  மேல் தான்  திருப்பி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம் .
அதையும் பங்கு வர்த்தகத்தில்  முதலிடு செய்ய போகிறார்கள். 
https://sites.google.com/a/germanymantra.com/socialsecurityrefund/faqs
http://www.india.diplo.de/Vertretung/indien/en/__pr/Business__News/Social__Security__Agreement__14Oct__2011.html

3. தொழில் 
திறமைக்கு  பரிசு (சுருக்கமாக பின்னர் எழுதுவேன்).நீங்கள் 5 முதல் 10 ஆண்டுகள் போன்ற  குறுகிய  காலத்தை நினைத்தால் இது முற்றிலும் வீண்.

4. வரி சலுகைகள் முழுமையாக  பயன்படுத்தி  கொள்ள ,.
சில நிபந்தனைகளை அடிப்படையாக,
நாம் முழுமையாக வரி சலுகைகள் பயன்படுத்தலாம்.
குழந்தைகள் பணம்-  200  யூரோக்கள் மாதத்திற்கு ( 18 வருடங்கள்  வரும் ஆனா வராது ..துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை   )
கர்ப்பிணி பெண் -    முதலில் மணைவிக்கு விசா வாங்குவதிலையே பெரிய பெரிய தடைகள் தாண்ட வேண்டி வரும், குறைந்தது  6 மாதம் காலம் போராட  வேண்டி  இருக்கிறது  (இந்த தனி கதை பின்னர் விரிவாக சொல்லப்படும் ).
அந்த பெண்  ஏற்கனவே  1 ஆண்டு வேலை பாத்திருக்க வேண்டும்.   அவர்களுக்கு1 ஆண்டு மொத்த தொகையில் இருந்து 65 %(வேலை செய்யும் நிறுவனம் ஒத்து கொள்ள வேண்டும் )  கிடைக்கும் , அனால் எத்தனை மனைவி மார்கள் இங்கே வந்து மொழியை கற்று , வேலைக்கு பதிவு செய்து   போவர்கள் என்று தெரியாது . 

5. வங்கி கடன்.
உங்கள் சம்பளத்தின் அடிப்படையில் உங்களுக்கு வங்கி கடன் கொடுப்பார்கள்.
வங்கி கடன்  6% முதல் 9% வரை வட்டி போடுவார்கள் .(சுருக்கமாக பின்னர் எழுதுவேன்).
அதற்கு இன்சூரன்ஸ்  என்ற பெயரில், மாதம்  மாதம் சில யூரோக்கள்  அழ  வேண்டும் .புத்திசாலியாக பயன் படுத்த வேண்டும்  இல்லையென்றால் கார்போரேட் அடிமை  என்ற பட்டத்தோடு வங்கி கடனாளி என்ற பட்டத்தையும் இழி நிலையோடு சுமக்க வேண்டும்  

வரவு 

1. பாதுகாப்பு,
2. நீங்கள் உங்கள் மனைவி இடம் அதிக நேரம் செலவிட முடியும் . உங்கள்     நெருக்கம் கூடும் .
3. ஊருல மரியாதை 
4.ஐரோப்பிய வாழ்க்கை
5.சகிப்புத்தன்மை நிலை
6. career development  (ரொம்ப முக்கிய மானது , கார்போரேட்ல் இன்னும் 30 வருடம் வேலை செய்ய  விருப்பட்டால் )
7. நீங்கள் இங்கே வாழ முடியும் என்றால் நீங்கள் எங்கும் வாழ முடியும் (இவனிடமே அடிமையாக இருக்க முடியும் என்றால் எங்கு வேண்டுமானாலும் அடிமை வாழ்கையை தொடரலாம் )

இழப்பு 

1.இளமை 
2.தலைமயிர் 

3.இளமை கில்மாக்கள் (நல்லவனாக காட்டி கொண்டால் )
4.சோறு 
5.நிம்மதி 
6.ஆடம்பர அடிமை
7.ஊருக்கு  அடிக்கடி செல்ல முடியாது (உங்க கல்யாணத்துக்கு  சேத்துதான் )


கடைசியாக உங்கள் சம்பளம்  எவ்வளோ என்பதை  பொறுத்தே  எல்லாம்  அமையும்.5 வருடமோ  , 10 வருடத்திலோ  நீங்கள் ஜெர்மனியில்  இருந்து திரும்பி இந்தியா  செல்வது என்றால்  தான்  இது எல்லாம்.
நீங்கள்  ஜெர்மனிக்கு  படிப்பதற்காக   மட்டும் வருவேன் என்றால்  தாராளமாக வரலாம் .ஊர் சுற்றி பார்க்க ,  இங்கயே  வாழ்ந்து  மடிவது என்றால்  தாராளமாக வரலாம் .இங்கே 5 அல்லது 10 வருடம்  பணம் சம்பாரித்து இந்தியா திரும்பி செல்ல  வேண்டும்  என்றால்  நீங்கள் ஜெர்மனிக்கு  வருவதை பற்றி சிந்திக்க வேண்டும்.நீங்கள் இந்தியாவில் சேமிப்பதை விட ஜெர்மனியில் அதிகம் சேமிக்க வழியை கண்டு பிடித்தால் இங்கு வரலாம்.இல்லை என்றால் யோசித்து கொண்டே ஜட்டியை தேட வேண்டும்.