ஞாயிறு, 31 மே, 2009

புலவர் நாணேற்றிதி

(inga tamil museum Franfurtla nadanthuchu,appo oru tamil thalaivar oru oolai chuvadi kamichi kel kanda karuthukalai soonaru,atha photo eduthu, tamil type panni,makkaluku en idiratha paniylum :)   arapnikiren)

( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)


ஆகாய தேண்ட முடா சொன்ன
தபு வண்ண திமிறு ஆட்ட !
வெண்ண சொக்க பூமி வெல்ல
சொன்ன சின்ன வண்ண காற்றே !
விண்ண தூக்க வந்த கலை சொக்கனே
சுட ஏற்றி சின்ன சுர வாகை
சுடி வெற்றி மொழி ஈனதுகே !


புலவர் நாணேற்றிதி

Nostradamus , இவரை இறந்ததற்கு பின் அறிந்தவர்கள் பலபேர் . அனால் உயிருடன் இருந்தபோது அவரின் தன்மையை பலர் அறியவில்லை . அதற்கு காரணம் அவராகவே இருக்கலாம் , அவரே இதை தன் காலத்திற்கு பிறகுதான் பலர் அரிய வேண்டும் என்று எண்ணிருக்கலாம். பல மேதைகளின் கருத்துகள் அவர்கள் இறந்த பின் தான் பரவும். socrates, aristotle,plato ... பாரதியார் வரை இதே நிலைமை தான் . மேலே உள்ள புலவர் பற்றி சொல்ல வேண்டுமானால் , அவரும் nostradamus போல்தான் . அவர் பெயர் , பல இலக்கியங்களில் வந்துள்ளது . மறைமுகமாக அவரின் பெயர் வில்லில் ஏற்றிய நாணத்தை குறிக்கிறது , அதுபோலதான் அவரும் , சில பின் வரும் காலங்களின் உண்மைகளை ஏட்டில் எழுதி வைத்த மாய தமிழன். அவர் காலம் தொல் இலைகியங்க்ளுக்கு பிந்தியது அனால் கருத்து , வரும் நூறாண்டுகளுக்கு!. மேலே உள்ள பாடல், அவர் வாழ்ந்த பொது ஓரு சிறிய கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அப்பொழுது பல கண்டத்தில் உள்ள மக்களிடம் நல்ல உறவை வைத்துள்ளனர் , இதை தமிழ் மக்களை பற்றி கூறிஉள்ளார். பின் அந்த உறவை வைத்து உலகத்தை ஆண்டதாக கூறுகிறார். பின் சில காலங்களில், வந்து இறங்கிய சில மனிதர்களிடம் ஆட்சியை ஒப்டைதால் மீண்டும் ஆட்சியை இழந்தனர் என்று முர்பாடலில் கூறுகிறார். பிற்பகுதியில் அவரே ,சில காலங்களுக்கு தமிழர் மீண்டும் பல நாடுகளுக்கு வணிகம் , படிப்பு, கலை , வேலை போன்ற செயல்களுக்கு சென்று அங்கே குடியேறுவர் , பின் அரசியலில் இடுபட்டு மீண்டும் உலகத்தை உள்ள எல்லா பகுதியிலுள்ள தமிழ் கொடிபறக்கும் என்றும் கூறியுள்ளார் .
இவர் சொல்வது உணமையாக மாற இன்னும் கொஞ்சம் காலங்கள் ஆகும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கணிகிறார்கள். இது ஒரு புறம் இருக்க இவரை பற்றி ஆராய்ச்சிகள் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்கிறது. இவரை பற்றி இன்னும் சுவையான தகவல்கள் வெளிவரும் என்று நம்புவோமாக.

ஞாயிறு, 17 மே, 2009

அவன் அவள் மேல் கொண்ட மோகம்


( நிறைய பிழை இருக்கும். மன்னித்து , மறந்து படியுங்கள்)

எனக்கு சிறு வயதில்ருந்தே அவளிடம் மோகம் அதிகம் , என் சிறு வயதில் அவளை பார்க்கும் போது அவள் சுமாராக தான் இருந்தால் , அனால் வருடங்கள் நகர நகர அவள் முன்பை விட வேகமாகவும் விவேகமாகவும் மிக அழகாகவும் மெருகு எரிருந்திரல் . நான் முதலில் அவளை பார்த்த வயது பத்து, அவளை விரலால் வருடியது பதினெட்டில் , 17 அவளை கற்க ஆரம்பித்தது , இன்னும் கற்று கொண்டே இருகிறேன் .முன்பை விடு அவள் மிது பற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது . தினமும் அவளை தரிசித்தால் தான் இரவில் உறங்குவேன் . இப்பொழுது எல்லாம் என் முழுவேலை அவளையே சுற்றியேதான், இப்பொழுது எல்லா நேரமமும் எல்லாம் காலமும் அவளிடம் இருகிறேன் . அனால் என்னவோ தெரியவில்லை, மற்றவைகளை பார்க்கும்பொழுது , எவளிடம் ஏதோ குறை இருக்கிறது, இப்போது அவளை கடைக்கு எடுத்து செல்கிறேன் , புதிதாக வந்த இன்டெல் சிப்பை அவளிடம் பொருத்துவதற்காக.

வெள்ளி, 8 மே, 2009

FIrst LOve

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கொடைமலை.
கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம்.
பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ்.
தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம்.
சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம்.
விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி.
என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சொற்றுணவு.
நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம்.
இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்ததடி நான் உன்மேல் கொண்ட என் முதல் காதல்!!!.


- Copyright Kadhal Kavi MR. Prabhu (SIrkali RWTH Germany)