வெள்ளி, 8 மே, 2009

FIrst LOve

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கொடைமலை.
கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம்.
பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ்.
தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம்.
சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம்.
விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி.
என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சொற்றுணவு.
நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம்.
இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்ததடி நான் உன்மேல் கொண்ட என் முதல் காதல்!!!.


- Copyright Kadhal Kavi MR. Prabhu (SIrkali RWTH Germany)

கருத்துகள் இல்லை: